Blogger Widgets

புத்தம் புதுசு
வருகை தந்தமைக்கு மிக்க நன்றி. தமிழ் மொழியில் முழுமையான ஒரு விஞ்​ஞான தொழில்நுட்ப இணையத்தளத்தை தருவதற்கான இரு கன்னி முயற்சியே இது. தயவுசெய்து உங்கள் ஆதரவுகளை தொடர்ந்து வழங்குங்கள்.
Showing posts with label Science. Show all posts
Showing posts with label Science. Show all posts

Monday, April 13, 2015

மின்னல் எப்படி உருவாகிறது

விண்வெளியில் நாம் ஆச்சரியபட கூடிய விடயங்கள் இன்னும் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. அவற்றில் ஒன்று தான் மின்னல் மழை காலங்களில் மின்சக்தியின் தீப்பொறி வடிவத்தை தான் மின்னல் என்போம்.








ஒரு நெருப்பு பொறி உருவாக மின்சக்தி குறிப்பிட்ட ஒரு மின்னழுத்த எல்லை யை மீற வேண்டும். மின்னல் காற்றின் மூலமாக இரு மேகங்களுக் கிடை யிலோ பூமிக்கோ கடத்தப்படுகின்றது. ஆனால், காற்று ஓர் அரிதிற் கடத்தி. சூரியனில் இருந்து வரும் கொஸ்மிக் கதிர்கள் காற்றுடன் மோதும் போது. காற்றினை அயனாக்கம் செய்து மின்னேற்றங்களை தூண்டுகிறது. சக்தி பகுப்பினால் ஏற்படுத்தபடுகின்ற மின்விளைவு மிகஅதிகம், அதாவது அதிக ளவு சக்தி காலப்படும். சிலநேரங்களில் 100 ,000 வோல்டினை விட கூடியளவு அழுத்தத்தினை உருவாக்ககூடிய சக்தி காலப்படும்.

கடல் மற்றும் ஏனைய நீர்தேக்கங்களிலிருந்து நீரானது சூரியனின் வெப்பத் தினால் நீராவி நிலைக்கு மாற்றபட்டு மேலெழுந்து மேகங்களை அடைகி ன்றது. இந்த நீராவி மேலே செல்லும் போது வளிமண்டல அமுக்கம் குறைவத னால் நீராவி விரிவடையும், இதனால் நீராவி குளிரடையும். மழை மேகத்தில் காணப்படும் அணுக்கள் உராய்வு, சூரியனிலிருந்து வரும் கொஸ்மிக்கதிர் போன்ற காரணிகளால் ஏற்றம் பெரும். முகில் கூட்டங்களில் மேல் பகுதி ஒரு வகை ஏற்றமும் கீழ் பகுதிக்கு எதிரான ஏற்றமும் பெரும். இவ்வாறு, பெரும் மின்னேற்றம் அதிகமாகும் போது எதர் எதிர் ஏற்றங்கள் கொண்ட முகில் கூட்டம் அருகருகே வரும் போது மின்னேற்றம் ஈர்ப்பு விசையால் காற்றின் வழியே மின் பாயும். இவ்வாறு பாயும் போது தீப்பொறி உருவாகும்.

மின்னலானது பூமியை நோக்கி பயணித்து மனிதர்கள், விலங்குகளையும் தாக்கும். மின்னல் பூமியினை நோக்கி கவர்ந்திழுக்கப்படும். மின்னலினால் ஏற்படும் பாதிப்பு மழைகாலங்களில் அதிகம். மின்னல் உருவாகும் போது, மரங்கள் மற்றும் குடிசைகளுக்கு கீழேயோ, அருகிலோ இருக்க கூடாது. இவை ஈரளிப்பாக இருக்கும் போது மரத்தின் உச்சியிலிருந்து அடியை நோக்கி மின்னோட்டம் பாயும், இந்த வேளையில் நாம் அருகிலோ மரத்தை தொட்ட வண்ணமோ இருந்தால் எம்மூடாக மின்னோட்டம் பாய்ந்து புவியை அடையும்.

மின்னலின் போது நிலத்தில் கிடையாக படுக்கவோ, மின்சாதன பொருட்கள், தொலைபேசி என்பனவற்றை பயன்படுத்தவோ கூடாது. நாம் காணும் அநேக மான மின்னல்கள் புவியை தொடுவதில்லை ஆனால் அவை மேகம் காற்று என தொடர்ந்து தடத்தினை அமைத்து பயணிக்கும்.

நடக்கும் போது அல்லது படுத்திருக்கும் போது அல்லது கால்களை அகற்றி வைத்திருக்கும் போது கிட்டத்தட்ட 1 மீட்டர் இடைவெளி காணப்படும் போது அழுத்த வித்தியாசம் காரணமாக மின் எம்மூடாக பாயக்கூடும். இதனால் தான் கால்நடைகள் அதிகளவு மின்னல் தாக்கத்தால் பலியாகின்றன. 

இடிமின்னலிருந்து பாதுகாப்பு பெற இடி தாங்கி பயன்படும். மாடி கட்டடங் களில் அதிகமாக இடி தாங்கி பொருத்தபட்டிருக்கும், இடி முழக்கத்திலிருந்து மின்சாதன பொருட்களை பாதுகாப்பதற்காக பொருத்தப்படுகின்றது. இங்கு மின்சாதனத்தை நோக்கி வரும் மின்னை பூமியிற்கு திசை திருப்புவதே இதன் தொழில். 

இதற்காக பூமியை நோக்கி செப்பு கம்பினை பயன்படுத்தி கொண்டு செல்லப் படும். இறுதில் தடிப்பு கூடிய செப்பு கீற்று பயன்படுத்தப்படும். இங்கு தடையை குறைக்க தடிப்பமான செப்பு பிரயோகப்படுத்துவார்கள். உச்சியில் கூர்மை யான உலோக அமைப்பு பயன்படும். ஏனெனில் கூர்மையான அமைப்பு ஏற்றங் களை அதிகளவு கொண்டிருக்கும். இலகுவாக எதிர் ஏற்றத்தை கவரும்.
Read more ...

Friday, April 3, 2015

வானம் என்ன நிறம் ??

ஏன்? எதற்கு ? எப்படி ? என்ற வினாக்களுக்கு மட்டும் தான்   மூட நம்பிக்கைகளை அழிக்கும் சக்தியிருக்கிறது. இயல்பாகவே இயற்கையின் படைப்பில் பலவற்றில் சந்தேகம் இருக்கிறது.அவற்றில் ஒன்று தான் ஏன் வானம் நீலமாக காட்சியளிக்கிறது?





















சூரியனில் இருந்தோ அல்லது மின்குமிழில் இருந்தோ வரும் ஒளி வெள்ளை நிறமாக இருக்கும் ஆனால் பல நிறங்களை உள்ளடக்கியது. இதனை வானவில்லில் காணலாம். வாயுமண்டலத்தில் ( ATMOSPHERE ) கூடுதலான சதவிகிதம் (78 % நைட்ரஜன், 21 % ஆக்சிஜன் ) வாயுக்களும் மிகுதி நீராவியும் மாசுத்துணிக்கைகளும் உண்டு . அவற்றினூடே ஒளி பூமியை வந்தடைகிறது.

ஒளி அலைகள் வேறுபட்ட அலைநீளத்தை உடையவை. சிவப்பு நிறம் கூடிய அலை நீளம் கொண்டது. நீல நிறம் குறைந்த அலைநீளம் உடையது.

கூடிய அலைநீளம் உடைய ஒளி அலைகள் வந்தடைகின்றன. குறுகிய அலைநீளம் உடைய நீல நிற ஒளி வாயுத்துணிக்கைகளால் உறிஞ்சப்படுகிறது. உறிஞ்சிய துணிக்கைகள் அதை கதிர்க்கின்றன. அவை தெறிப்பு அடைந்து நீல நிறமாக வானம் தோன்றுகிறது.ஒளி காற்று மண்டலத்தில் இடையூறி ல்லாமல் பயணம் செய்தாலும் காற்றிலுள்ள அணு மூலக் கூறுகள் நீர்த்துளிகள் பனிமூட்டம் போன்றவை ஒளியைச் சிதறடிக்கின்றன. சிதறிய ஒளி மேலும் மேலும் சிதறடிக்கப்படுகிறது. இவ்வாறு நடைபெறும் போது மிக அதிகத்துடிப்புடைய நீல நிறம் மிக அதிகமாக சிதறடிக்கப்படுகிறது. (சிவப்பு மிகக்குறைவாக சிதறுகிறது.)

நாம் பார்க்கும் போது அவ் ஒளி அலைகள் கண்ணை வந்தடைகின்றன. அதனாலேயே பகலில் வானம் நீல நிறமாக இருப்பது போல தோன்றுகிறது. வானம் என்பது வெறுமனே வாயுத்துணிக்கைகள், மாசுக்களால், மேலே கூறப்பட்ட ஒளி ஆல் ஆனதே தவிர அப்படி ஒன்று இல்லை என்பதே உண்மை.

பௌதீக விதிப்படி ஒரு நிறத்தின் ஒளி அலைகளின் நீளம் அதிகமா இருந்தா அவை நம் பார்வைக்குக் கிடைக்காமலே போய்விடும்.நீல நிறத்தின் ஒளி அலைகள் குறைவாக இருப்பதால் அது நம் கண்களுக்குள் மாட்டிக் கொள்கிறது.

வானம் நீல நிறமாக இருப்பதால் அதை பிரதிபலிக்கும் கடலும் நீல நிறமாகவே இருக்கிறது. காலைமாலை சூரிய உதயம் அஸ்தமனம் போது மட்டும் அந்தப்பகுதி சிவப்பாக தெரியக்காரணம். சூரியக்கதிர்களில் உள்ள சிவப்பு நிறத்தின் ஒளியலைகளின் நீளம் அப்போ மட்டும் குறைவதுதானாம்!

பூமியின் மேலுள்ள காற்று மண்டலம் தான் காரணம்.சூரிய ஒளி அனைத்து வண்ணங்களையும் உள்ளடக்கியது.வானவில்லில் அது தன் தோகையை விரித்து ஏழு வர்ணங்களைக் காட்டுகிறதே அதனுள் மற்ற வர்ணங்களும் அடக்கம். அவை அனைத்தும் ஒளியே ஆயினும் வர்ண வேறுபாடுகளுக்கு காரணம் அந்த ஒளியின் அலைநீளம் மற்றும் துடிப்பு வானவில்லின் வண்ணங்களில் நீல நிறம் மிக அதிகத் துடிப்புடனும் சிவப்பு மிகக் குறைந்த துடிப்புடனும் இருப்பவை.

நாம் ‘பார்ப்பது’ என்பது ஒளி நமது கண்ணில் வந்து படும்போது மட்டுமே. பார்க்கும் பொருட்கள் எல்லாமே அதில் பட்டு திரும்பும் ஒளி நமது கண்ணை வந்தடைவதால் தான் காற்று மண்டலத்தில் பலமாக சிதறடிக்கப்படும் நீல நிறமே மற்ற நிறங்களை விட பெருமளவில் நமது கண்ணில் வந்து விழுகிறது. ஆகவே தான் வானம் நீல நிறம்.


இரவில் நிலவின் ஒளி நட்சத்திரங்களின் ஒளி ஆகியவை பலம் குறைந்த ஒளியாக இருப்பதால் அந்த சிதறல்கள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. நேராக வரும் ஒளியை மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது.
Read more ...

Wednesday, April 1, 2015

மனித மூளை ஒரு அதிசயம்

இந்த கட்டுரையின் மூலம் மனித மூளை எவ்வாறு நினைவுகளை சேகரித்து வைக்கின்றது என்பதை அறிந்து கொள்வோம்.இது ஞாபக மறதியை தவிர்க்க உதவும் என்று நினைக்கிறேன்.


















மூளை நாம் பார்க்கும், கேட்கும்,உணரும் செயல்களை  மூன்று நிகழ்வுகள் மூலம் சேமித்து கொள்கிறது.அவைகள்,

பதியவைத்தல்:
இதுவே நிகழ்வுகளை நமது நினைவகத்தில் சேமித்தல்  ஆகும். அதாவது, நமது புலங்களான கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தோல் ஆகியவை நமது சுற்றுப் புறத்திலிருந்து தகவல்களை சேகரித்து மூளைக்கு அனுப்புகின்றன.உ+ம்: நமது கண் ஒரு நபரை முதல் முறையாக காணும் பொழுது அவரின் நிறம்,உருவம் ,உயரம் போன்ற தகவல்களை   மூளைக்கு அனுப்பும்.இந்த தகவல்கள் நமது மூளையில் நியூரோன்கள் (neurons) எனும் நரம்பு செல்கள் வழியாக கடத்தப்படும்.இந்த தகவல்கள் ஒரு நரம்பு செல்லில் (neuron) இருந்து மற்றொரு நரம்பு செல் வழியாக பாயும்.அதாவது இரு செல்களின் இடைவெளியை கடக்கும் பொழுது ஒரு வகை வேதியல்  (neurotransmitor) மூலக்கூறு வெளிப்பட்டு இரு நரம்பு செல்களிடையே ஒரு இணைப்பை ஏற்படுத்தும்.இந்த இணைப்பிற்கு சினப்சே(synapse) என்று பெயர். இந்த இணைப்பு உறுதியாகும் பொழுது அந்த நபரை பற்றிய நினைவு உங்கள் மூளையிலிருந்து அகலாது.இந்த இணைப்பு உறுதியாவது ஒரு முறை பார்த்தவுடன் நிகழ்ந்துவிடாது.ஒருநபரை  மீண்டும் மீண்டும் பார்க்கும் பொழுது அவரை பற்றிய தகவல் நாம் நரம்பு செல்களில் உறுதியான இணைப்பாக (synapse) பதிய வைக்கப்படும். இந்த இணைப்பு எந்த அளவுக்கு உறுதி ஆகிறதோ அந்த அளவுக்கு அந்த நபரை பற்றிய நினைவையும் நாம் மறக்காமல் இருப்போம்.
இது அனைத்து விதமான நினைவுகளுக்கும் பொருந்தும். ஒவ்வொரு நினைவுகளுக்கும் ஒரு தனி இணைப்பு (synapse) நம் மூளையில் உருவாகும். இவ்வாறு தான் நாம் படிக்கும் பாடம் , கேட்கும் விஷயம், பார்க்கும் படம் அனைத்துமே நம் மூளையில் பதிய வைக்கப்படும்.  மீண்டும் மீண்டும் படிப் பதன் மூலம் நாம் படித்த பாடமானது ஒரு உறுதியான நரம்பு செல் இணைப்பாக மாறி மறக்காமல் இருக்கிறது.
நினைவகளின் வகைகள்:
இவை மூன்று வகைபடும் ,
1.சென்சாரி
2.ஷார்ட் டைம் மெமோரி
3. லோங் டைம் .
சென்சாரி நினைவுகள் மிக சொற்ப வினாடிகளே நினைவில் இருக்கும்.(உ+ம்) நாம் முதல் முறை கேட்கும்  ஒருவரின் குரல் நமக்கு நினைவில் தங்காது.
ஷார்ட் டைம் மெமோரி எனும் இரண்டாம் வகை நினைவுகள் 30 வினாடிகள் வரை நினைவில் இரு க்கும். (உ+ம்) ஒருவரின் தொலைபேசி என்னை முதல் முறை கேட்கும் பொது அந்த என் உடனேயே எழுதி வைக்காவிடில் மறந்துவிடும்.
லாங் டெர்ம் மெமோரி எனும் நீண்ட கால நினைவுகள் நாம் மூளை நன்றாக செயல்படும் வரை நமக்கு மறக்காது.அதற்கு நாம் செய்ய வேண்டிய ஒன்று அந்த நிகழ்வுகளை நமக்குள் நினைவுபடுத்திக்  கொண்டே இருப்பது.(உ+ம்).உங்களில் பலருக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு வந்து அந்த முதல் காதல் இன்னும் நினைவிருக்கும். இதற்கு காரணம் நீங்கள் ஒவ்வொரு முறை உங்கள் காதலி பற்றி நினைக்கும் போதும் உங்கள் மூளையில்  காதல்  பற்றிய இணைப்பு(synapse) உறுதி ஆகும்.     நீங்கள் ஏதாவது ஒரு நினைவை பற்றி நினைவு கூறாத போதும், நினைக்காத போதும் உங்கள் மூளையில் அந்த விஷயத் திற்கான  பிரேத்தியேக இணைப்பு விடுபடத் தொடங்கும்.இதனால் தான் மறதி ஏற்படுகிறது.
தகவல்களை நினைவுகூறுதல் :
நாம் ஒரு தகவலை நம் மூளையிலிருந்து நினைவுகூரும் பொது அந்த தகவலானது இந்த synapse எனும் நரம்பு செல்களின் இணைப்பு வழியாக தான் ஞாபகத்திற்கு திரும்பி நினைவு கூறுகிறோம். நான் முன்பே கூறியதை போல இந்த இணைப்பு விடுபடும் பொது ஞாபகபடுத்துதல் சிரமமாகும்.இதுவே மறதியின் காரணம்.
இந்த மறதியை தவிர்க்க நாம் மூளையில் சேகரிக்கும் தகவல்களை ஆழமாக பதிய வைக்க வேண்டும். அதாவது பாடம் கேட்கும் பொது அதை கவனமாக கேட்டு மூளையில் பதிய வைக்க வேண்டும். மேலும் அந்த தகவல்களை நமக்குள் சொல்லி பார்த்து கொள்வதால் அந்த தகவலுக்கான இணைப்பு நாம் நரம்பு செல்களில் உறுதியாகி நமக்கு எளிதில் ஞாபகத்தில் இருக்கும்.
முதுமையும் மறதியும்:
மனித மூளையானது சுமாராக 100 பில்லியன்(100*100 கோடி) நரம்பு செல்களை (நியூரான்ஸ்) கொண்டது. நமக்கு 3 வயது ஆகும்போது தான் அந்த செல்கள் முழு வளர்ச்சி அடையும்.இதனால் தான் நமக்கு 3 வயதிற்கு முந்தய ஞாபகங்களை நினைவு படுத்த முடிவதில்லை. 3 வயதில் தான் நாம் அதிக எண்ணிக் கையிலான நரம்பு செல்களை கொண்டிருக்கிறோம். 3 வயது குழந்தைக்கு நாற்பது மொழிகள் கற்றுக் கொள்ளும் திறன் இருப்பதாக நான் கேள்விப்  பட்டு இருக்கிறேன். இதுவே அதற்கு காரணம். நாம் இருபது வயதுகளை கடக்கும் போது நமது மூளையில் உள்ள  இந்த நரம்பு செல்கள் குறைய தொடங்கி நாம் என்பது வயதை எட்டும் போது  சுமாராக இருபது சதவீத நரம்பு செல்களை இழந்திருப்போம். மற திக்கு இது ஒரு காரணம் என்று கூறலாம்.
இருப்பினும் நாம் மீதமுள்ள நரம்பு செல்களை கூட நமது வாழ்நாளில்  முழுவதுமாக பயன்படுதுவது இல்லை.இந்த இருபது சதவீத செல்களின் இழப்பு ஒரு குறை ஆகாது. நம்மில் பலர்  முதுமை வந்த பிறகு நமது நடவடிக்கைகளை குறைத்து கொள்கிறோம். நமது சிந்தனையையும் குறைத்து கொள் கிறோம். இதனால் நாம் நினைவு கூறாத விஷயங்களுக்கு உரிய இணைப்புகள் நம் மூளை செல்களில் விடுபடுகின்றன. இதுவே மறதிக்கு முக்கிய காரணம். நாம் முதுமையிலும் நம் மூளைக்கு சவாலான செயல்களை கொடுத்து கொண்டே இருந்தால் நம் மூளை முதுமையிலும் இளமையாக செயல்படும்.
Read more ...

Thursday, March 26, 2015

முதல் 3D மினி நுரையீரல் உருவாக்கம்

விஞ்ஞானிகள் ஸ்டெம் செல்களில் இருந்து முதல் 3டி மினி நுரையீரலை வளர்த்துள்ளனர். முன்னர் உருவாக்கப்பட்ட 2டி கட்டமைப்புகளை விட, தற் போது உருவாக்கிய 3டி மினி நுரையீரல் கட்டமைப்புகள், மனித நுரையீரல் உடன் ஒப்பிடும்போது அதிக ஒற்றுமை கொண்டுள்ளது என்று ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித்துள்ளனர். ELife வெளியிடப்பட்ட ஆய்வின் படி, பெரிய ப்ராக்சிமல் காற்றுக் குழாய் மற்றும் சிறிய டிஸ்டல் காற்றுக் குழாய் ஆகிய இரண்டும் ஒத்திருக்கும் வகையில் 3டி கட்டமைப்புகள் வளர்ந்து வருவது விஞ்ஞானிகளுக்கு வெற்றியை அளிக்கிறது என்று தெரியவந்துள்ளது. 



இதை மாறுபட்ட செல்களின் வகைகளில் உருவாக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம், ஆனால் எங்கள் நிறுவனம், மனித காற்றுக் குழாயை ஒத்திருக்கும் வகையில் கட்டமைப்புகள் உருவாக்கியுள்ளது. அது எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஒரு மிக அற்புதமான முடிவாகும் என்று மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் இருந்து தலைமை ஆசிரியர் ஜேசன் ஸ்பென்ஸ் கூறி யுள்ளார். 

ஒரு பெட்ரி(Petri) டிஷ் இல் எம்பிரியோனிக் ஸ்டெம் செல்கள், நுரையீரல் மேம்பாட்டில் ஈடுபட புரோட்டீன்கள், வளர்ச்சி காரணிகள் மற்றும் புரதம் கலவையை விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர். முதலில், ஸ்டெம் செல் களில் ActivinA புரோட்டீன் சேர்க்கப்பட்டது, அதன் பின்னர் நான்கு நாட்கள் கழித்து என்டோதெர்மின் எனப்படும் ஒரு வகை திசுக்கள் உருவாக்கப்பட்டது. என்டோதெர்மின் ஆரம்பத்தில் கருக்கள்(embryos) காணப்படும் மற்றும் நுரை யீரல், கல்லீரல் மற்றும் பல உள் உறுப்புகளிலும் உயர்வு கொடுக்கும். 

பின்னர் நாக்கின் என்ற மற்றொரு புரோட்டீன் மற்றும் மாறுவதன் வளர்ச்சி காரணி(transforming growth factor) இதில் சேர்க்கப்பட்டது. அதன் பின்னர் மேலும் மற்றொரு நான்கு நாட்கள் அப்படியே விடப்பட்டது. foregut spheroids என்று அழைக்கப்படும் 3டி கோள வடிவ கட்டமைப்பு வடிவத்தில் என்டோதெர்மின் தூண்டப்படுகிறது, என்று ஆராய்ச்சியாளர்கள் மினி நுரையீரல் வளர்ந்து வரும் முறை பற்றி விரிவாக கூறியுள்ளனர். 

அடுத்த கட்டமாக இந்த கட்டமைப்புகள் விரிவுபடுத்தி, நுரையீரல் மேம் பாட்டில் ஈடுபட்டுள்ள புரோட்டின்களுக்கு செல்களை வெளிப்படுத்து வதன் மூலம் நுரையீரல் திசுக்களை உருவாகும். நுரையீரல் உறுப்பு சுய அமைப்பு முறையில் உள்ளன, 3-பரிமாண திசுக்களை உருவாக்க மேலும் கையாளுதல் தேவையில்லை என்று ஸ்பென்ஸ் விளக்கியுள்ளார். இந்த கட்டமைப்புகள் ஒரு டிஷ் இல் உருவாக்கியுள்ளது, எனினும் அவை இரத்த நாளங்கள் உள்ளி ட்ட உண்மையான நுரையீரல்களில் உள்ள பல கூறுகளில் குறைபாடு உள்ளது. 

மேலும் இதில் மூச்சுவிடுதல் போன்ற கடினமாக செய்களை சேர்த்து ஒரு மனித நுரையீரலை போல உண்மையான 3டி மினி நுரையீரலை உருவாக்க நாங்கள் இன்னும் முயற்சி செய்து வருகிறோம்' என்று ஸ்பென்ஸ் கூறியு ள்ளார்.
Read more ...

Sunday, March 22, 2015

ஆச்சர்யம் ஆனால் உண்மை – மூளை குறித்த தகவல்கள்

நமது உடலின் எடையில் 2% மட்டுமே மூளையின் எடை. ஆனால் அது நம் ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்ஸிசனில் 20 % கிரகிக்கிறது.

மனிதனின் 18 வயசு வரைக்கும் மூளை வளர்ச்சி தொடரும் அதுக்கப்புரம் ?ஒவ்வொரு நாளும் மூளை செல்கள் இழப்பு நிகழும்.

நம் உடலின் மூளை நரம்பு செல்லின் தூண்டுணர்வின் வேகம் மணிக்கு 170 மைல்கள் எனக் கணக்கிட்டு இருக்காங்க.

ஒரு 10 வாட் பல்பு எரிவதற்கு தேவைப் படும் மின்சாரம் மூளைக்கு தேவை ஆச்சர்யம் ஆனால் உண்மை.(அதுக்காக கரண்ட்பெட்டில கைய வைச்சுராதீங்க ! )



என்சைளோபீடியா பிரிட்டானிக்கா புத்தகங்களில் உள்ள தகவல்கள் அளவில் 5 மடங்கு நம் மூளை தகவல்களை சேமிச்சு வெச்சு இருக்கு, இந்த தகவல் உறுதியா தெரியல ஆனா விஞ்ஞானிக நம்பராங்க… (குத்து மதிப்பா இருக்கும் போல )

விஞ்ஞானிகளுக்கு ஆச்சர்யம் அளிப்பது , நாம விழித்து இருக்கு போது செயல் படுவதை விட துங்கும் போது ஆதீத ஆற்றலில் செயல்பாடு எப்படி என்பதுதான்.

கை கால இடுப்பு வலி இதெல்லாம் அந்த அந்த பகுதியில் ஏற்படும் வலிதான் இல்லையா ஆனால் தலைவலி என்று சொல்வது மூளையை சுற்றி இருக்கும் நரம்புகள், ரத்த நாளங்களில் திசுக்களில் ஏற்படும் வலிதானே தவிர மூளை வலியை உணர்வது இல்லை. இன்னும் தெளிவா சொல்லனும்னா மூளையை தொட்டால் அதை உணர முடியாது.

இதயத்தில் இருந்து மூளைக்கு செல்லும் ரத்தக் குழல் தமனிகளை (aorta) ஒன்று சேர்த்தால் ( diameter of a garden hose) அந்த விட்ட அளவு வீட்டு தோட்ட திற்கு பயன்படுத்தும் குழாய் அளவு இருக்கும்

பொதுவாச் சொல்றது மூளையை நாம 10% தான் பயன் படுத்துறோம்னிட்டு அப்ப 90% சும்மா இருக்குமா என்றால் இல்லை , எல்லா செல்லுமே வேலை செஞ்சுகிட்டு தான் இருக்கும்.

தூக்கம் மூளைக்கு ரொம்ப ரொம்ப முக்கியம் 11 நாட்கள் ஒருவன் தூங்காம இருந்தால் அவன் இறந்து விடுவான்.
Read more ...

Friday, March 20, 2015

பெண்கள் மட்டும் ஆளும்உலகம்!

பொதுவாக இயற்கை முறையில் ஒரு உயிர் உருவாக வேண்டுமென்றால் ஆண்-பெண் இனப்பெருக்க உறவு முறை மூலமே சாத்தியமாகின்றது.
ஆனால், பல புழுவகைகளில் பெண் இனம் மட்டுமே இருக்கின்றன. அவற்றில் ஆண்கள் இருப்பதில்லை!
ஆம், அவ் புழு வகைகள் இனப்பெருக்கம் அடைவதற்கு ஆண்களின் துணை தேவைப்படுவதில்லை. பெண் புழுவே இனப்பெருக்க காலத்தின் போது கரு முட்டைகளை உருவாக்கிக்கொள்கின்றன.
நம்ம மண்புழுக்கள் (Earthworm) பலவும் இந்த ஜாதிதான்!
புழுக்கள் மட்டுமன்றி பல பல்லி (lizard) வகைகளிலும் இப்படியான ஒரு இன-இனப்பெருக்கம் இடம்பெறுகின்றது. உதாரணமாக மெக்சிக்கோவில் வாழும் whiptail எனும் பல்லி வகைகளில் ஆண் பல்லிகளே இருப்பதில்லை. அவை தோன்றியது முதல் இன்றுவரை 100% பெண் பல்லிகளாகவே இருக்கின்றன!

சிந்தித்துப்பாருங்கள்… இவ்வாறான ஒரு நிலை மனிதனிற்கு வந்தால் உலகம் எப்படியிருக்கும்… மனிதர்கள் எப்படியிருப்பார்கள் என்று…இவ்வாறு நடைபெறும் இனப்பெருக்கத்தை பார்தெனோஜெனிசிஸ் (parthenogenesis) இனப்பெருக்கம் என்று அழைப்பார்கள். இரு பெண் இனங்கள் சேர்ந்து ஒரு “பெண்” உயிரை உருவாக்கும் இனப்பெருக்க முறையும் இதற்குள் அடங்கும்.
( ஆண் இனப்பெருக்கத்தில் பங்காற்றாததால் y குறோமோஷோம் கருக்கட்ட வாய்ப்பேயில்லை, அதனால்தான் இந்த இனங்களில் ஆண் உயிரினம் இருப்பதேயில்லை!)

Read more ...

Thursday, March 19, 2015

நம் உடல் குறித்த ஆச்சர்ய தகவல்கள்

கர்பமாக இருக்கும் பெண்கள் எந்தவிதமான கனவுகளை பொதுவில் காண்கிறார்கள் ? பூந்தொட்டிகள், பூந்தொட்டிகளில் இருக்கும் செடிகள், புழுக்கள், தவளைகள்கனவில் வருகிறதாம் இது ஏன் என்பது விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டதாக இருப்பதாக சொல்கிறார்கள்.














நீண்ட நேரம் தொலைக்காட்சியோ, சினிமாவோ பார்த்தால் நாம் சோர்வடைகிறோம் ஏன் ? என்றால் காட்சியை காண்பதற்கு மூளையின் சரிபாதி சக்தி செலவிடப்படுகிறது.
காட்சிகள் எல்லாம் தலைகீழாக தெரிவதுமாதிரியான கண்ணாடியை மனிதர்களிடம் கொடுத்து சோதித்தார்கள் ஓரிரு நாட்களில் அவர்கள் காட்சியை நேராக உணர்ந்தார்கள் இது மூளை செய்த மாயா ஜாலம். அதே போல கண்ணாடியை எடுத்த பின்பு பார்ப்பவை எல்லாம் சீராக நேராக ஒரே நாளில் அவர்கள் காண முடிந்தது.
சிம்பன்சிகளைப் பார்த்து அது உடம்புல என்ன இவ்ளோ முடின்னு வியக்கிறோம் ஆனா ஒன்ன மறந்திட்டோம் நம்ம உடம்புலேயும் அவ்ளோ முடி இருக்குது என்ன மெல்லியது குட்டையானது அவ்ளவே வித்தியாசம்.









ஐலேஸ் மைட்ஸ் (eyelash mites) என்று சொல்லக்கூடிய நுண் உயிரி உங்கள் இமைகளில் உயிர்வாழ்கிறது. மைக்ராஸ் கோப்பில் பார்த்தால் ஒன்னாச்சும் இருக்கும்ன்னு சொல்றாங்க.
ஆண்களை விட பெண்களின் கண்சிமிட்டல் இரண்டு மடங்கு (அதான் எனக்கு தெரியுமே ! -உங்க மைண்ட் வாய்ஸ்) இதேபோல இன்னொன்னு சொல்லனும்னா அது வாசனையை நுகர்வது.
10000 லிட்டர் காற்றை நாம் ஒரு நாளைக்கு சுவாசிக்கிறோம்…(காற்றை எப்படி அளப்பீங்கன்னு கேட்கக் கூடாது )
சாப்பிடும் போது பேசக்கூடாதுன்னு சொல்வாங்க…ஏன் அப்படிச் சொன்னாங்கன்னா, சாப்பிடும்போது தாடை அசைவினால் நமக்கு அடுத்தவங்க பேசுவது சரியா (சின்ன சப்தங்கள்) கேட்காது இதுவும் ஒரு காரணம். மூக்கு பிடிக்க சாப்பிடறா சொல்றோம் அப்ப காது கொஞ்சம் மந்தமா இருக்கும்.
நம் உடம்பில் இருக்கும் இரும்புச்சத்தில் 8 செ.மீ நீளமுள்ள ஆணி செய்யலாமாம்.
தூக்கத்தில் கெட்ட கனவுகள் வருவதற்கு நம் அறையின் குளிர் அதிகமாயிருப்பதும் ஒரு காரணம். (நல்ல வேல நான் ஏசியில் தூங்குவதில்லை)
வேற்று கிரகவாசியின் கை (Alien hand Syndrome) இது மூளை சம்பந்தமான ஒரு நோய் (brain trauma) இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களின் கை தானா அனிச்சையாக நகர்ந்து கொண்டு இருக்கும்.
நெடுங்காலம் குடல் வால் ஒரு பிரியோஜனம் இல்லாத உறுப்புன்னு நெனச்சாங்க சமீபத்தில கண்டுபிடிச்சது என்னன்னா குடல் வாலில் சாப்பிடும் உணவு ஜீரணமாக தேவைப்படும் ஒருவகை பாக்டீரியாவை குடல் வால் தக்க வெச்சிருக்கு.
நம் குடலில் ஒரு ரேசர் ப்ளேடை கரைக்கக் கூடிய என்சைம்கள் வெளியாகுது.(சோதிச்சு பார்திராதீங்க !!) நாம் சாப்பிடும் மாமிசத்தை ஜீரணம் செய்துவிடுகிறது அப்ப குடலின் உள் அறைகள் சேதாரம் ஆகாதா ? என்றால் ஆகும் அதுக்குத்தான் மூன்று நான்கு நாட்களுக்கு ஒருதடவை குடலின் உட்சுவர் வளர்கிறது.
மனித எலும்புகள் காண்க்ரீட்டை விட பலம் வாய்ந்தது (கராத்தே மாஸ்டர் செங்கல்களை எப்படி உடைக்கிறார்ன்னு தெரிஞ்சதா ! )
உடம்பில் உள்ள பெரிய செல் எது என்றால் அது கருமுட்டை (பெண்களின்), அதேபோல் சின்ன செல் எது என்றால் அது விந்தணு (ஆண்களின்)
நம் மூக்கின் இரு நாசித்துவாரங்களிலும் எப்போதும் நாம் மூச்சை இழுத்து விடுவது இல்லை. அப்பப்ப (4 hours once) ஒரு துவாரத்தில் மூச்சு விட்டுப்போம் இழுத்துப்போம்.
இரத்தத்தில் இருக்கும் ஒரு சிவப்பு ரத்த செல்லானது நம் உடலை ஒரு நிமிடத்தில் முழுவதும் சுற்றிவிடும்.
ஆண்கள் தான் அதிகமா ஜொல்லு விடுறதா சொல்லுவாங்க (அது உண்மை இல்லன்னு நினைக்கிறேன். ) வாழ்நாளில் நம் வாயில் 10000 காலண் சலிவா உற்பத்தியாகுதாம்.
பிறந்த குழந்தைக்கு 350 எலும்புகள் உடலில் இருக்குமாம் வளர வளர 206 ஆக குறைந்துவிடுகிறது எப்படின்னா ஒன்றுக்குள் ஒன்று சேர்ந்து விடுகிறது. அதே மாதிரித்தான் ஒட்டகச்சிவிங்கி கழுத்தில் இருக்கும் எலும்புகளின் எண்ணிக்கையும் மனிதனின் கழுத்து எலும்புகளின் எண்ணிக்கையும் ஒன்று என்கிறார்கள்.
Read more ...

Wednesday, March 18, 2015

விண்ணைத்தொடும் மின்தூக்கி விரைவில்...

விண்ணில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கோ செய்மதிகளை சரிபார்பதற்கோ விண்ணிற்கு விஞ்ஞானிகளை அனுப்ப வேண்டும் என்றால் விண் ஏவிகள் (rockets) மூலமே அனுப்ப வேண்டியுள்ளது. இதற்கான செலவு அதிகமாக்கும்.







இதற்கு மாற்றீடாக விண்ணுக்கும் புவிக்கும் இடையே மின் தூக்கியொன்றை நிர்மாணிக்கும் திட்டம் பேச்சளவில் இருந்தது. இப்போது, இத்திட்டத்தின் வடிவமைப்பு மற்றும் ஆலோசகரான Peter Debney இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அறிவித்துள்ளார்.
ஆனால் திறம்பட இயங்க 100 வருடகாலம் வரை கூட ஏடுத்துக்கொள்ளலாம் என கருத்து தெரிவித்துள்ளார்.
2035 இல் இத்திட்டம் திறம்பட இயங்கும் என, வேறு பல திட்ட ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கான உத்தேச செலவு 20பில்லியன் அமெரிக்க டொலர்கள். திட்டம் நிறவேறினால், விண்ணுக்கு ஒரு கிலோகிராம் நிறையை அனுப்ப 225$ இக்கும் குறைவாகவே முடியும் என் கூறப்படுகிறது.
மேலும் அறிய “space elevator” என கூகுள் செய்யவும்
Read more ...

Sunday, March 15, 2015

இமைகள் கண்களை எப்படி காக்கின்றன?

இமைகள் எப்படி கண்களைப் பாதுகாக்கின்றன என்பது குறித்த புதிரை விஞ்ஞானிகள் விடுவித்துள்ளனர்.













மிகநீண்ட காலமாக இமைகள் கண்களுக்குள் தூசிகள் போவதைத் தடுக்கும் ஒரு வடிகட்டியாகவே கருதப்பட்டது.
ஆனால் மனிதர்கள் உட்பட 22 பாலூட்டிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வுகள், இமைகளின் செயல்பாடு தொடர்பில் புதிய தகவல்களை அளித்துள்ளன.
கண்களின் மேற்பரப்பில் காற்று நேரடியாக வீசுவதை இமைகள் தடுத்து, அதை திசைமாற்றி விடுகின்றன என்று அமெரிக்க ஆய்வாளர்கள் இப்போது கண்டறிந்துள்ளனர்.
அதேபோல் ஆய்வு நடத்தப்பட்ட பாலூட்டிகள் அனைத்திலும், இமைகளின் நீளமானது, கண்களின் அகலத்தில் மூன்றில் ஒரு பங்கு இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த விகிதமானது எவ்விதமான தடையும் இன்றி, அதிகபட்ச பாதுகாப்பை அளித்து பார்வை தெளிவாகத் தெரிய உதவுகிறது என்று இந்த ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பு எதிர்வரும் காலத்தில் ஓளி உணர்வுத் தொழில்நுட்பத்தின் புரிதலுக்கு மேலும் உதவும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
-BBC Tamil
Read more ...

விஞ்ஞானம்

தொழில்நுட்பம்

தொலைபேசி

கணினி தகவல்கள்

மர்மங்கள்

Designed By Knowledge Drive