Blogger Widgets

புத்தம் புதுசு
வருகை தந்தமைக்கு மிக்க நன்றி. தமிழ் மொழியில் முழுமையான ஒரு விஞ்​ஞான தொழில்நுட்ப இணையத்தளத்தை தருவதற்கான இரு கன்னி முயற்சியே இது. தயவுசெய்து உங்கள் ஆதரவுகளை தொடர்ந்து வழங்குங்கள்.
Showing posts with label Technology. Show all posts
Showing posts with label Technology. Show all posts

Thursday, March 26, 2015

முதல் 3D மினி நுரையீரல் உருவாக்கம்

விஞ்ஞானிகள் ஸ்டெம் செல்களில் இருந்து முதல் 3டி மினி நுரையீரலை வளர்த்துள்ளனர். முன்னர் உருவாக்கப்பட்ட 2டி கட்டமைப்புகளை விட, தற் போது உருவாக்கிய 3டி மினி நுரையீரல் கட்டமைப்புகள், மனித நுரையீரல் உடன் ஒப்பிடும்போது அதிக ஒற்றுமை கொண்டுள்ளது என்று ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித்துள்ளனர். ELife வெளியிடப்பட்ட ஆய்வின் படி, பெரிய ப்ராக்சிமல் காற்றுக் குழாய் மற்றும் சிறிய டிஸ்டல் காற்றுக் குழாய் ஆகிய இரண்டும் ஒத்திருக்கும் வகையில் 3டி கட்டமைப்புகள் வளர்ந்து வருவது விஞ்ஞானிகளுக்கு வெற்றியை அளிக்கிறது என்று தெரியவந்துள்ளது. 



இதை மாறுபட்ட செல்களின் வகைகளில் உருவாக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம், ஆனால் எங்கள் நிறுவனம், மனித காற்றுக் குழாயை ஒத்திருக்கும் வகையில் கட்டமைப்புகள் உருவாக்கியுள்ளது. அது எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஒரு மிக அற்புதமான முடிவாகும் என்று மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் இருந்து தலைமை ஆசிரியர் ஜேசன் ஸ்பென்ஸ் கூறி யுள்ளார். 

ஒரு பெட்ரி(Petri) டிஷ் இல் எம்பிரியோனிக் ஸ்டெம் செல்கள், நுரையீரல் மேம்பாட்டில் ஈடுபட புரோட்டீன்கள், வளர்ச்சி காரணிகள் மற்றும் புரதம் கலவையை விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர். முதலில், ஸ்டெம் செல் களில் ActivinA புரோட்டீன் சேர்க்கப்பட்டது, அதன் பின்னர் நான்கு நாட்கள் கழித்து என்டோதெர்மின் எனப்படும் ஒரு வகை திசுக்கள் உருவாக்கப்பட்டது. என்டோதெர்மின் ஆரம்பத்தில் கருக்கள்(embryos) காணப்படும் மற்றும் நுரை யீரல், கல்லீரல் மற்றும் பல உள் உறுப்புகளிலும் உயர்வு கொடுக்கும். 

பின்னர் நாக்கின் என்ற மற்றொரு புரோட்டீன் மற்றும் மாறுவதன் வளர்ச்சி காரணி(transforming growth factor) இதில் சேர்க்கப்பட்டது. அதன் பின்னர் மேலும் மற்றொரு நான்கு நாட்கள் அப்படியே விடப்பட்டது. foregut spheroids என்று அழைக்கப்படும் 3டி கோள வடிவ கட்டமைப்பு வடிவத்தில் என்டோதெர்மின் தூண்டப்படுகிறது, என்று ஆராய்ச்சியாளர்கள் மினி நுரையீரல் வளர்ந்து வரும் முறை பற்றி விரிவாக கூறியுள்ளனர். 

அடுத்த கட்டமாக இந்த கட்டமைப்புகள் விரிவுபடுத்தி, நுரையீரல் மேம் பாட்டில் ஈடுபட்டுள்ள புரோட்டின்களுக்கு செல்களை வெளிப்படுத்து வதன் மூலம் நுரையீரல் திசுக்களை உருவாகும். நுரையீரல் உறுப்பு சுய அமைப்பு முறையில் உள்ளன, 3-பரிமாண திசுக்களை உருவாக்க மேலும் கையாளுதல் தேவையில்லை என்று ஸ்பென்ஸ் விளக்கியுள்ளார். இந்த கட்டமைப்புகள் ஒரு டிஷ் இல் உருவாக்கியுள்ளது, எனினும் அவை இரத்த நாளங்கள் உள்ளி ட்ட உண்மையான நுரையீரல்களில் உள்ள பல கூறுகளில் குறைபாடு உள்ளது. 

மேலும் இதில் மூச்சுவிடுதல் போன்ற கடினமாக செய்களை சேர்த்து ஒரு மனித நுரையீரலை போல உண்மையான 3டி மினி நுரையீரலை உருவாக்க நாங்கள் இன்னும் முயற்சி செய்து வருகிறோம்' என்று ஸ்பென்ஸ் கூறியு ள்ளார்.
Read more ...

Monday, March 23, 2015

கூகுள் (Google) உருவான சுவாரசிய கதை

கூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது. அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு. "நாங்க ஜாலியா கம்பனி ஆரம்பிக்கிறோம் " என்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள். அந்த கம்பனிதான் இணைய உலகில் ஒரு விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.இதன் முதலாளி லாரி பேஜ். தன் கல்லூரித் தோழர் செர்ஜி பன்னுடன் சேர்ந்து காலேஜ் படிக்கும்போதே கம்பெனி ஆரம்பித்தவர்.



















எட்டு வருடத்தில் உலகத்தின் நம்பர் ஒன் இன்டர்நெட் கம்பெனியாக வளர்ந்து போட்டியே இல்லாமல் இணைய மலையின் உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது கூகிள்.லாரியும், செர்ஜியும் பிட்ஸா சப்ளை செய்து சம்பாதித்த காசில் மிச்சம் பிடித்து கம்ப்யூட்டர் வாங்கித் தங்கள் ஹாஸ்டல் அறையில் கம்பெனியை ஆரம்பித்தார்கள்.

பிறகு ஒரு வீட்டு கராஜை வாடகைக்கு எடுத்து ஆறு ஊழியர்களுடன் கம்பெனி நடத்தினார்கள். இன்றையத் தேதிக்கு கூகிளின் மதிப்பு பன்னிரெண்டாயிரம் கோடி டாலருக்கு மேல்.கணிதத்தில் கூகால் (googol) என்ற ஒரு பெரிய நம்பர்.
ஒன்று போட்டு நூறு சைபர்.

எத்தனை கோடி வலைப் பக்கங்கள் இருந்தாலும் தேடித் தந்துவிடுவோம் என்ற அர்த்தத்தில் இந்தப் பெயரை வைத்தார்கள்.

ஆனால் நம் கதாநாயகர்களுக்கு ஸ்பெல்லிங் கொஞ்சம் தகராறு. (கூகால்) என்பதற்குப் பதிலாக (கூகிள்) என்று தப்பாக எழுதிவிட்டார்கள். யாரும் கவனிக்காததால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.

அடுத்து வரும் போஸ்ட் களில் facebook, microsoft கதைகளை பார்க்கலாம்.
Read more ...

Friday, March 20, 2015

டேப்லெட்டை விஞ்சும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ள பிரேஸ்லெட்!

 தற்போது சிறிய வளையல் அளவிலான ஒரு நவீன பிரேஸ்லெட்டில் தொடுதிரை (டச் ஸ்கிரீன்) தொழில்நுட்பத்தை தொடுதோல் (டச் ஸ்கின்) தொழில்நுட்பமாக ஒரு நிறுவனம் சுருக்கி விட்டது. சீக்ரெட் பிரேஸ்லெட் என பெயரிடப்பட்டுள்ள இந்த உபகரணம் நமது மணிக்கட்டில் தொடுதிரையின் பிம்பத்தை வெளிக்கொணரும். ஸ்மார்ட் போனில் தோன்றுவது போலவே அனைத்து ’ஐகான்’களும் உங்களது மணிகட்டில் தெளிவாக தோன்றும். ஸ்மார்ட்போனினை பயன்படுத்துவது போல தொடுதிரையை தேர்வு செய்யலாம். 



மேலும் இதன்மூலம் வெப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். வீடியோ எடுக்க முடியும். வாட்ஸ்அப்பில் வந்த படங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை படிக்கலாம். விரல்களை விரித்து திரையின் அளவை தேவைக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். முழுக்க தண்ணீரில் மூழ்கியிருக்கும் நிலையிலும் இந்த சீக்ரெட் பிரேஸ்லெட் பழுதாகாது. 

உங்கள் பிரேஸ்லெட்டில் உள்ள ஒரு ‘பிக்கோ ப்ரொஜெக்டர்’ மூலம் உங்கள் கரத்தின் முழங்கை பகுதியில் பாய்ச்சப்பட்டு, (மணிக்கட்டு) திரையில் தோன்றும் 'கமாண்ட்' பொத்தான்களின் மூலம் நீங்கள் இடும் கட்டளைகள் மீண்டும் பிரேஸ்லெட்டில் உள்ள ‘ப்ராஸெஸருக்கு’ அனுப்பப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் இவை அத்தனையும் செயலாற்றுகின்றது.

உங்கள் கை மணிக்கட்டுக்கும், கட்டளையிடும் விரலுக்கும் இடையே பாயும் லேசர் கதிர்களின் வாயிலாக விரும்பும் வகையில் இது செயல்படும். நீடித்த பேட்டரி மற்றும்  கண்ணைக் கவரும் வண்ணங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த சீக்ரெட் பிரேஸ்லெட்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Read more ...

Wednesday, March 18, 2015

ஆரம்பமாகவுள்ள ஏலியன்ஸ் தேடல் வேட்டை...

நாசாவின் வேற்றுக்கிரகவாசிகளை கண்டறியும் பிரிவான SETI முதல் முதலாக பரவலாக அண்டத்தில் வேற்றுக்கிரகவாசிகளை தேடும் பணியை தொடங்கவேண்டிய காலம் நெருங்கிவிட்டதாக அறிவித்துள்ளது.
















இது பற்றி SETI யின் பொறுப்பாளர் Douglas Vakoch கூறும் போது…
கடந்த காலகட்டத்தில் 3800 இற்கு மேற்பட்ட கிரகங்களை உயிரினங்கள் வாழக்கூடிய கிரகங்கள் என நாசா ஆய்வு வகைப்படுத்தியுள்ளது. அக் கிரகங்களை குறிவைத்தே இந்த ஏலியன்ஸ் தேடல் இடம்பெறவுள்ளது.
அதாவது, உயிரினங்கள் உணரும் வகையில் சமிக்ஞைகள் அக்கிரகங்களை நோக்கி விடப்படவுள்ளது.
எனினும் ஒரு தரப்பு இத்திட்டத்தை எதிர்க்கிறது. அவர்கள் தரப்பில், வேற்றுக்கிரகவாசிகள் எம்மைவிட அதீத தொழில்நுட்பத்தை கொண்டிருப்பின் எமது தொடர்பு பூமியின் அழிவிற்கு வித்திடும் என கூறுகின்றனர்.
இதற்கு பதில் அளிக்கையில், கடந்த 4பில்லியன் ஆண்டுகளாக பூமியில் உயிரினம் வாழ்கிறது. இதுவரை எந்த வேற்று உயிரினமும் எம்மை தாக்க முனையவில்லை. எனவே இப்பயம் தேவையற்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஓரிரு ஆண்டுகளில் சமிக்ஞைகள் அனுப்பபடலாம்.
Read more ...

Sunday, March 15, 2015

ஆப்பிள் i-watch அணிய நீங்கள் தயாரா ??

பல வருடங்களாக அனைவரும் எதிர்பார்த்து இருந்த ஆப்பிள் i-watch  வருகின்ற ஏப்ரல் 24 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக US, UK, Australia, Canada, China, France, Germany, Hong Kong and Japan ஆகிய நாடுகளில் விற்பனைக்காக வெளியிடப்பட உள்ளது .












விலை 350 - 17000 அமெரிக்க டொலர்கள். 
வசதிகள் :  iOS 8.2, ஈ மெயில் , facebook alert, அழைப்பு வசதி (call), WeChat messages மற்றும் Twitter trends. 
Read more ...

Saturday, March 14, 2015

அதிக சத்தத்துடன் இசை கேட்டால் செவித் திறன் பாதிக்கும்

ஒரு நாளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் இசையை கேட்பதால் கேட்கும் திறன் பாதிப்படைவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆகவே ஒரு நாளைக்கு ஒரு மணித்தியாலத்திற்கு மேல் இசையை கேட்பதை தவிர்ககுமாறு அந்த நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.













இசையை அதிகமாகவும் பெரிய சத்தமாகவும் கேட்பதால் 1.1 பில்லியன் இளைஞர்கள் தமது கேட்கும் திறனை நிரந்தரமாக இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர்.
ஆடியோ பிளேயர்கள், இசைநிகழ்ச்சிகள் மற்றும் மதுபானசாலைகள் என்பனவும் கூட கடுமையான அச்சுறுத்தலாக உள்ளன.
12 முதல் 35 வயதுக்கு உட்பட்ட 43 மில்லியன் பேர் கேட்கும் திறனை இழக்கும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
பணக்கார மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் உள்ள இந்த வயது கட்டமைப்பிற்குள் உள்ளவர்களில் 50 வீதமானோர் தமது தனிப்பட்ட ஆடியோ சாதனங்களில் பாதுகாப்பற்ற அளவுகளில் சத்தத்தை கேட்பதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
பதின்ம வயதினரின் கேட்கும் திறன் குறித்து ஐக்கிய அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் 1994 இல் 3.4 வீதமானவர்கள் கேட்கும் திறனை இழந்திருந்ததுடன் அது 2006 இல5.3 வீதமாக அதிகரித்துக் காணப்பட்டது.
இசையை கேட்கும் போது ஒரு மணித்தியாலத்திற்கு குறைந்த நேரம் கேட்பதுடன் ஒலி அளவை குறைத்துக் கேட்டால் சத்தத்தால் செவிப்புலனுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க முடியும் என்பதே இந்த ஆய்வின் சாராம்சமாக உள்ளது.
-BBC Tamil
Read more ...

விஞ்ஞானம்

தொழில்நுட்பம்

தொலைபேசி

கணினி தகவல்கள்

மர்மங்கள்

Designed By Knowledge Drive