பேரு நாட்டின் தென்பகுதியில் ஒரு காய்ந்த சமவெளிப்பிரதேசத்தில் காணப் படும்,1500 வருடங்களுக்கு முன் நாஸ்கா இந்தியர்களால் வரையப் பட்டிருக்க வேண்டுமென நம்பப்படும் நாஸ்கா வரை கோடுகள் வெளிப்படுத்தும் செய்தி என்ன என்று யாரும் அறியார்கள். இந்தப் பிரதேசமானது பசுபிக் சமுத்திரத்தின் கரையோரத்தில் அமைந்துள்ள பேரு நாட்டின் தென் பகுதியில் அந்தீஸ் மலை த்தொடரினருகே காணப்படுகின்றது.பயன்படுத்தப்படாத பரந்த அந்த நிலம் முழுவதுமே வித்தியாசமான கோடுகளாலும்,வளைவுகளாலும் ஆக்கப்பட் டுள்ள பறவைகள்,மிருகங்கள்,பூச்சிகள்,ஊர்வன மற்றும் கேத்திர கணித உருவங்களால் நிரம்பியுள்ளது.
சில நிபுணர்கள் இதனை உலகின் மிகப்பரிய வானசாஸ்திர நாட்காட்டி எனக் கருதுகிறார்கள்.இதன் அளவையும் வரையப்பட்டுள்ள பாணியையும் நோக்கும் போது கணிதத்தில் பிரியமுள்ள இராட்சதனால் உருவாக்கப்பட்டுள்ளது என்றே தோன்றுகிறது.மனதை வியப்படையச் செய்யும் இந்த விடயத்திற்கான திருப்திகரமான விடை இன்னும் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டு பிடிக்கப்படவில்லை.
கோடுகள் வரைவதில் அப்படி என்ன பெரிய மர்மம்? நாம் ஏடுகளில் வரையாத கோடுகளா, ஓவியங்களா என்ற கேள்வி நம் மனதில் எழாமலில்லை. இவர்கள் வரைந்த கோடுகளின் பிரம்மாண்டமும், வரைந்த முறையும் தான் பிரமிப்பி ற்குக் காரணம். இரும்புத்தாதுப் பொருட்கள் நிறைந்த நாஸ்கா நிலத்தில செந் நிறத்தில் கூழாங்கற்கள் பரவிக்கிடக்கின்றன. இந்தக் கூழாங்கற்கள் அகற்றப் படும் இடம் வெளிர் நிறமாக மாற, இதே முறையில் கோடுகளை வரைந்துள் ளனர்.
இரண்டு கால்பந்தாட்ட மைதானங்கள் அளவிற்கு உள்ள இடத்தில் ஒரு குரங்கு வரையப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் ஆரம்பிக்கும் கோடு சிறிய காதுகள், தலை, கால்கள், அளவான உடல், ஆறேழு சுற்று சுற்றிய வால் என சீராக வரைய ப்பட்டு ஆரம்பித்த இடத்திலேயே முடிகிறது. பாடப்புத்தகத்தில் ஒரு ஓவிய த்தை சீராக வரையவே நாம் சிரமப்படும் வேளையில், எப்படி பிரம்மாண் டமான கோடுகளைத் தீட்ட முடிந்தது? இந்தக் குரங்கின் முழு உருவத்தைப் பார்க்க வேண்டுமென்றால் குறைந்தது ஒரு கிலோமீட்டர் உயரத்திற்குச் செல்ல வேண்டும். அதுவும் இப்பொழுது இருப்பதைப் போல உயரத்தில் இருந்து கண்கானிக்கும் கருவிகள், கட்டுமானத்துறையில் பயன்படுத்தப்படும் அளவெடுக்கும் கருவிகள் எதுவும் இல்லாத 1500 ஆண்டுகளுக்கு முன்பு!
குரங்குகள், பறவைகள், சிலந்திகள், சூறாமீன்கள், பல்லிகள் என பெரிய உருவ ங்களும், முக்கோணம், நாற்கரம் போன்ற வடிவங்களும் ஏராளமான நீண்ட கோடுகளும் பீடபூமி முழுவதும் வரையப்பட்டுள்ளன. நாஸ்காக் கோடுகளை ஆராய்ச்சி செய்யும் வல்லுனர்கள், "எப்படி பல நூறு மீட்டர்கள் தொலைவில் இருந்து வரும் 60 கோடுகளை ஒரே புள்ளியில் இணைத்திரு க்கிறார்கள்" என்று வியக்கிறார்கள்.
விண்கலன்களில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களிலும் தெளிவாகத் தெரியும் படியான ஆயிரக்கணக்கான கோடுகளை எதற்காக நாஸ்கா மக்கள் வரைந்திருக்கிறார்கள்? இந்தக் கோடுகள் கூறும் அர்த்த மென்ன?
மரியா ரெய்சி என்ற ஆராய்ச்சியாளர் தன் வாழ்நாள் முழுவதையும் நாஸ்கா கோடுகளை ஆராய்ச்சி செய்வதற்கே அர்ப்பணித்துள்ளார். நாஸ்கா கோடுகள் வின்வெளியில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களையும், சூரியன் மற்றும் சந்திர னின் உதயத்தையும் அஸ்தமனத்தையும் குறிப்பதாகக் கூறியுள்ளார்.
இவருடைய ஆராய்ச்சி முடிவையும் தீர்வாக ஆராய்ச்சியாளர்கள் ஒத்துக்கொ ள்வதில்லை. வேற்று கிரக உயிரினங்கள் வந்திறங்க உதவுவதற்கே இந்த கோடுகள் வரையப்பட்டுள்ளதென்று சிலரும், இறைவனை வழிபடுவதற்கும் தங்கள் இருப்பிடத்தைத் தெரிவிப்பதற்காகவும் வரையப்பட்டது என்று சிலரும் மிக நீளமான ஆடைகளின் இழைகளை நெய்வதற்காக இந்தக் கோடுகள் வரை யப்பட்டதென்றும் சிலர் கூறுகிறார்கள்.
நாஸ்கா கோடுகளைப் பற்றிய காணொளி கீழே..
No comments:
Post a Comment