Blogger Widgets

புத்தம் புதுசு
வருகை தந்தமைக்கு மிக்க நன்றி. தமிழ் மொழியில் முழுமையான ஒரு விஞ்​ஞான தொழில்நுட்ப இணையத்தளத்தை தருவதற்கான இரு கன்னி முயற்சியே இது. தயவுசெய்து உங்கள் ஆதரவுகளை தொடர்ந்து வழங்குங்கள்.

Thursday, April 16, 2015

கப்பலில் ஆவிகள் உலவும் திகில் மர்மம் பகுதி 01

“RMS குயின் மேரி  இது டைட்டானிக் கப்பல் கட்டப்பட்டுவதற்கு முன்பே கட்டப்பட்ட பிரம்மாண்ட கப்பல். இது இப்போது கலிபோர்னியாவின் லாங் பீச் கடற்கரை மணல் திட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட ஹோட்டல்.

இந்த கப்பலில் இரவு தங்கும் சூயுட்ஸ்கள்(365) , டைனிங் ஹால்கள், பங்விட் [Banquet ] எனப்படும் இரவு நினைவு பார்டிகள், வரலாற்று தேடல்களுக்கான சுற்றுலா, எல்லவற்றிற்கும் மேலாக ஆவி மற்றும் பிசாசு அனுபவங்களை பெற அழைப்பு விடுக்கிறார்கள். இந்த ஹோட்டலுக்கு ஆண்டுக்கு 1.4 மிலியன் பேர் வந்து செல்கிறார்கள்.



ஹவுண்டேட் பகுதியாக சொல்லப்படுகிற இந்த பிரம்மாண்ட கப்பல் குறித்த தகவல்களை காண்போம்.

ஜான் ப்ரெளண் கம்பெனி (ஸ்காட்லாந்து) மற்றும் குனார்ட் ஸ்டீம்சிப் நிறுவனத்தால் பொருளாதார நெருக்கடியினால் முக்கால் பாகம் கட்டி முடிக்கப்பட்டு ஒன்பது தளங்கள் கொண்டு முழுமையாக முடியாத நிலையில் 1931 ல் இருந்தது, பின்னர் இந்த நிறுவனம் வைட் ஸ்டார் லைன் கம்பெனியுடன் இணைந்து இந்த கப்பலை 1936 ல் உருவாக்கினார்கள்.

இந்த வைட் ஸ்டார் லைன் தான் புகழ் பெற்ற டைட்டானிக் கப்பலை நடத்தி வந்த நிறுவனம். அதனுடைய சாயல்கள் இந்த கப்பலில் பார்க்கலாம்.

அதை விடவும் இது பெரியது. இந்த பிரம்மாண்ட கப்பலின் நீளம் 1019.5 அடி, உயரம் 181 அடி புகைகூண்டு வரை,எடை 81,237 டண்கள், இதன் எஞ்சின் 1,60,000 குதிரைதிறன் கொண்டது . 3000 பேர் சொகுசாக பயணிக்கலாம்.இக்கப்பலுக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் கிரே கோஸ்ட்…! “

மே 27, 1936 ல் வெள்ளோட்டத்தை துவக்கி சிறப்பித்தவர்கள் எட்டாம் எட்வர்ட் அரசர், ராணி மேரி, இளவரசி எலிசபத்,டச்சு பிரபுக்கள். 1001 அட்லாண்டிக் பயணங்களை முடித்து செப்டம்பர் 19, 1967 ல் ஓட்டத்தை நிறுத்தியது அதாவது 31 வருடங்கள் உழைத்தது.இதனுடைய பெரிய உருவம் காரணமாக பனாம கால்வாய் வழியாக செல்ல முடியவில்லை.

அமானுஸ்யம் மற்றும் ஆவிகள் [ஸ்ப்ரிட்] குறித்த ஆராய்சியாளர் பீட்டர் ஜேம்ஸ். 1991 இல் இருந்து இக்கப்பலில் இது பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டவர்.
அவர் இப்படி கூறுகிறார்
எனது ஆராய்சியின் படி குயின் மேரி அதித பேய்கள் நடமாட்டப் பகுதியாக கருதுகிறேன். பேய் குறித்த ஆராய்சிகள் உலகின் பல பகுதிகளில் மேற்கொண்டேன். இந்த கப்பலில் 600 பேய்கள் ஏக்டிவாக இருக்கு, அநேக துர் மரணங்கள் இந்த கப்பலில் ஏற்பட்டது காரணமாக இருக்கலாம். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் 16000 துருப்புகளை ஏற்றி இறக்கி உள்ளது. இந்தியப் பெருங்கடலின் அதிக வெப்பத் தாக்குதல் காரணமாக அதிக அளவில் இறந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை அச்சமயத்தில் ஒருமணியில் 7 நிமிடங்களுக்கு ஒருவர் இறந்ததாக நம்பப்படுகிறது.
மேலும் U.S கூட்டணி துருப்புகள் பிடித்த ஜெர்மன் மற்றும் இதாலிய போர்க்கைதிகள் இதில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். சிறைக்கொடுமைக்கு பயந்து அநேகர் தற்கொலை செய்து கொண்டனர். சரியான மருத்துவ வசதி மறுக்கப்பட்டும் பலர் இறந்தனர். [ எண்ணிக்கை தெரியவில்லை…] அந்த கால கட்டங்களில் சர்வீஸ் ராணுவத்தின் கையில் இருந்திருக்கிறது. (தொடரும்.... )

No comments:

Post a Comment

விஞ்ஞானம்

தொழில்நுட்பம்

தொலைபேசி

கணினி தகவல்கள்

மர்மங்கள்

Designed By Knowledge Drive