உலகில் இனங்காணப்படாத பல மர்ம சம்பவங்கள் இருக்கின்றன, அதே போல் இன்னும் பல சம்பவங்கள் மூட நம்பிக்கள் முலமாக ” நடப்பதாக ” கருதப்படும் மாயைகளாக உள்ளன! இவை இரண்டிற்கும் பொதுவாக இன்றுவரை தனது மர்மத்தையும் மூட நம்பிக்கையையும் தக்கவைத்துக்கொண்டிருக்கும்; “மூட நம்பிக்கைகளின் மலைத்தொடர்” என பொருள் பட அழைக்கப்படும் “Superstition Mountains” மலைத்தொடர் பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
அமெரிக்காவின், அரிசோனா பகுதியில் இருக்கும் ஒரு மலைத்தொடர்தான் இது. அதை சுற்றி நிகழும் சம்பவங்களையும் நம்பிக்கைகளையும் பார்ப்போம்.
1800 ஆம் ஆண்டளவில் Jacob Waltz எனும் மனிதர் இந்த மலைத்தொடரை அடையாளங்கண்டார், அங்கு மிகப்பெரிய ஒரு தங்கப்புதையல் இருந்ததால் அவர் அதுபற்றி யாருக்கும் தெரிவிக்கவில்லை. வயது ஆகி இறுதியில் நோயின் தாக்கத்தால் மரணப்படுக்கையில் இருந்த அவர், தனக்கு நெருங்கிய ஒருவரிடம் மட்டும் அந்த தங்கப்புதையல் பற்றி கூறினார். அவர் அதை சிலரிடம் கூறினார்… பின்னர், அந்த சிலரில் ஒருவரால் அந்த நபர் கொல்ல ப்பட்டார். இதனால், அந்த புதையல் எங்கே இருக்கிறது என்ற சரியான இடம் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் புதையல் இருக்கும் கதை அதை சுற்றி இருந்த ஏரியாவிற்கு பரவியது. பலர் புதையலை தேடிச்சென்றார்கள். சென்றவர்களில் பாதிக்கு மேல் திரும்பிவரவில்லை. மர்மமான முறையில் இறந்து போனார்கள்! வந்தவர்களும் தங்கத்தை காணவில்லை, முன்னை யவர்களின் எலும்புக்கூடுகளை ஆங்காங்கே கண்டு, அதை சொல்லி திகிலை உண்டுபண்ணினார்கள்!
நம்பிக்கை 1
தப்பி வந்தவர்கள் பலர், அங்கே “Tuar-Tums” என அடையாளப்படுத்தப்படும் சிறிய மனிதர்கள் வாழ்வதாகவும். அவர்களே அந்த புதையலை ஆழ்வ தாகவும் கூறினார்கள். அதனால், அங்கு குள்ள மனிதர்கள் வாழ்வதாகவும், ஏலியன்ஸ் வந்து செல்லும் இடம் எனவும் கதைகள் பரவின.
நம்பிக்கை 2
அந்த மலைத்தொடர்களின் இடுக்கில் தான், நரகத்திற்கான நுழைவாசல் இருக்கிறது. என அந்த வளாக மத குருக்கள் ஒரு கதையை கட்டவிழ்த் துவிட்டார்கள்…
நம்பிக்கைகள் இவ்வாறிருக்க, அவர்கள் எப்படி இறந்திருப்பார்கள்?
என ஆராய்ந்தால்…
குறிப்பிட்ட மலைத்தொடர் இருக்கும் பிரதேசம் சுமார் 115-125F (ஃப்ரனைட்) வரை வெப்பம் வீசும் ஒரு பிரதேசமாகும். அதாவது பாலைவனம்! நீர் நிலைகள் இல்லை. அவ்வப்போது மழை பெய்தாலும் மழை பெய்த குறுகிய நேரத்தில் நீர் வற்றிவிடும்! அத்தோடு மலைத்தொடர் பல ஏற்ற இறக்க ங்களைக்கொண்டது என்பதுடன், பல குறுகிய குகைகளையும் கொண்டது.
இவற்றைக்கொண்டு பார்க்கும் போது, குறுகிய மலைஇடுக்குகளில் மாட்டுப்பட்டும், நீர் இன்றியும் பலர் இறந்திருப்பார்கள் என்பதை ஊகிக்க முடிகிறது.
எனினும், இன்றுவரை பலர் அந்த தங்கப்புதையலை குறிவைத்து அந்த பகுதி யில் தேடல் வேட்டை நடத்தத்தான் செய்கிறார்கள். அதில் பலர் இன்னமும் திரும்பவில்லை!
No comments:
Post a Comment